கொழும்பில் சற்று முன் கோரவிபத்து ; பலர் காயம் ..!!!


கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இந்த விபத்து சற்றுமுன்பு நிகழ்ந்ததாகவும், விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்புக்கும் கண்டிக்கும் இடையில் இயக்கப்படும் இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளே விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்துக்குப் பின்னர் வீதியில் மேலும் பல வாகனங்கள் விபத்துக்களில் சிக்கியுள்ளதாகவும், இதன் காரணமாக கொழும்பு- கண்டி பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here