கிளிநொச்சியில் பொலிஸ் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட லண்டன் குடும்பஸ்தருக்கு நடந்த கதி..!!!


கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் இருந்து வந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் குடும்பப் பிணக்கு தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரி தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பொலிஸ் நிலைய அலுவலகத்திற்குள் வைத்து 50000 பணத்தினை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளார்.

இதன்போதே குறித்த சந்தேக நபர் பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரியினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here