யாழில் பார்வைக் குறைபாடுடைய மாணவியின் உன்னத சாதனை..!!!


யாழ்.சுன்னாகத்தில் இயங்கி வரும் வாழ்வக நிறுவனத்தின் வரலாற்றில் முதல்தடவையாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் தோற்றிய மாணவியான தவராசா சிவாங்கி பொருளியல், வணிகக் கல்வி, கணக்கீடு ஆகிய மூன்று பாடங்களிலும் சித்தி பெற்று யாழ்.மாவட்ட மட்டத்தில் 411 இடத்தினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தவராசா சிவாங்கி குறைந்த பார்வையுடைய மாணவியாவார்.

சாதனை மாணவியைப் பெருமிதத்துடன் வாழ்த்துவதாக வாழ்வக சமூகம் அறிவித்துள்ளது. கல்வியில் மென்மேலும் உயர்நிலையை அடைய நாமும் மனதார வாழ்த்துவோம்.
Previous Post Next Post


Put your ad code here