பாடசாலையில் மயங்கி வீழ்ந்து மாணவி உயிரிழப்பு..!!!



மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்து களுவாங்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான்குளம் 8 ஆம் பிரிவு அமரசிங்க வீதியைச் சேர்ந்த க.பொ.தர சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி வழமைபோல சம்பவதினமான இன்றைய தினம் பாடசாலைக்குச் சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்து நிலையில் வகுப்பறையில் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து மாணவியை செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதில் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலை பிரே அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையில் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here