இரத்த காயங்களுடன் குளக்கரையில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு..!!!


வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து இரத்தக் கறைகளுடன் இளைஞனின் சடலம் ஒன்றை உளுக்குளம் பொலிசார் இன்று (16/04) மாலை மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைப் பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக அப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றவர்களால் உளுக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் வவுனியா விநாயகபுரத்தை சேர்ந்த கோபிதாசன் (வயது 33) என பொலிசார் தெரிவித்தனர்.

அவர் புதுவருட தினமான கடந்த 14 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட சடலத்தில் இரத்தக்கறைகள் படிந்துள்ள நிலையில் பல்வேறு கோணங்களில் உளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');