இன்றைய ராசிபலன் - 05.05.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். பெயர் புகழ் அந்தஸ்து கூடும். கௌரவத்தில் நீங்கள் சிறந்த மனிதர்களாக மாறுவீர்கள். மனதிற்குள் இருந்து வந்த ஏற்றத்தாழ்வுகள் விலகி சந்தோஷம் பிறக்கும். வியாபாரத்திலும் வேலையிலும் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். தன்னடக்கம் இருக்கும். அடுத்தவர்களையும் வாழ்க்கையில் முன்னேற்றி விட உதவிக்கரம் நீட்டுவீர்கள். மனநிம்மதி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். எதிலும் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திப்பீர்கள். எதிர்காலத்தை நல்ல வழியில் நடத்த, இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும். எதிர்கால சேமிப்புக்கு திட்டமிடலாம். எதிர்கால முதலீட்டிற்கு திட்டமிடலாம். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக இருக்கிறது. வேலை வியாபாரம் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. ஏதாவது ஒரு வகையில் நீங்கள் நினைத்து பார்க்காத அளவு நல்லது நடக்கும். உற்சாகம் பிறக்கும். இறைவழிபாட்டில் மனது ஈடுபடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் தடுமாற்றத்துடன் இருந்தவர்கள் எல்லாம் நல்ல நிலையாக ஒரு இடத்தை பிடிப்பீர்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் மனதில் நினைத்த ஆசைகளை இன்று நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வியாபாரத்திலும் சின்ன சின்ன தடைகள் வந்தாலும், அது உங்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும். தடைகளை தகர்க்க கூடிய திறமையும் உங்களிடத்தில் இருக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். தேவையற்ற பகைகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது. நிதானதோடு இருந்தால் சாதிக்கலாம். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். குறித்த நேரத்தில் குறித்த வேலையை முடித்துக் கொடுப்பது நல்லது. நேரத்தை அனாவசியமாக வீணடிக்க கூடாது.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு இருக்கும். அன்றாட வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கட்டக்கூடிய நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். சேமிப்பை உயர்த்த சில முயற்சிகளை மேற்கொள்ளலாம். அது உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தை கொடுக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தடை கற்களும் படி கற்களாக மாறும். தேவையற்ற சிக்கல்கள் நீங்கும். எதிரி தொல்லை விலகும். நண்பர்களோடு நேரத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். பணமும் கொஞ்சம் தாராளமாக செலவாக வாய்ப்புகள் இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். திருப்தியான வருமானம் கிடைக்கும். கட்டுமான தொழில் அமோகமாக லாபத்தை கொடுக்கும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட, நண்பர்களாக மாறிவிடுவார்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் கொஞ்சம் இருக்கும். வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடல் சோர்வு பெற வாய்ப்புகள் இருக்கிறது. நேரத்திற்கு அந்தந்த வேலையை முடித்துவிட்டு, நேரத்திற்கு நல்ல ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிட்டு, ஓய்வு எடுக்க பாருங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கும். பெயர் புகழ் தேடி வரும். வேலையில் பெருசாக பிரச்சனைகள் இருக்காது. வியாபாரத்தை பொருத்தவரை நீங்கள் மனம் தடுமாறாமல் முடிவுகளை எடுக்க வேண்டும். நிதானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். மூன்றுவது மனிதர்களுடைய பேச்சை கண்மூடித்தனமாக நம்ப கூடாது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். தேவையற்ற டென்ஷன் இருக்கும். வேலைகளை முடிக்க அயராது உழைப்பீர்கள். வியாபாரத்தை முன்னேற்ற நீங்கள் போடும் முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். நிதி நிலைமை சீராக இருக்கும். செலவுகளை குறைத்து எதிர்காலத்திற்கு சேமிப்பது புத்திசாலித்தனம்.
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');