மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேளையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பிரச்சனை என்றதுமே, உங்கள் மனதில் பயம் வரக்கூடாது. பிரச்சனை எதனால் வந்தது, அதை எப்படி சரி செய்வது என்று சிந்திக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள் நன்மை நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சேமிப்பு கரைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். அடம் பிடித்து எந்த காரியத்தையும் செய்யாதீங்க. வீட்டில் இருக்கும் பெண்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சரியாக நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கை ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும். காதல் வெளிப்படும். மனதிற்கு பிடித்த நபருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். அடுத்தவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு இன்னைக்கு உங்க வாழ்க்கை சந்தோஷமாக செல்லும். கவலை வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். நீண்ட நாள் இருந்து வந்த மன பயம் நீங்கும். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உறவினர்கள் மத்தியில் நல்ல பெயரும் வாங்குவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் முன்னேற தேவையான வழிகள் கிடைக்கும். புது மனிதர்களின் சந்திப்பு புது அனுபவங்களை கொடுக்கும். நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்களை சுற்றி இருந்த தேவையற்ற எண்ணங்கள் தானாக விலகிவிடும். பிரச்சனைகளை எதிர் கொள்ள மன தைரியமும் வந்துவிடும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலதிகாரிகளுடன் உங்களுடைய பிரச்சனைகளை மனம் விட்டு பேசுவீர்கள். நல்லது நடக்கும் நாள். உயர் பதவிகள் உங்களைத் தேடி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும் இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். மதிய நேரம் முடிவதற்குள்ளாகவே உடல் சோர்வு அடைய வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். நீண்ட தூர பயணத்தை தவிர்த்து கொள்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று எதிர்பாராத பண வரவு மன அமைதியை கொடுக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நகை வாங்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் கிடைக்கும். உங்களுடைய திறமை வெளிப்படும். நீங்கள் பிரச்சனையை கையாளும் விதம், அடுத்தவர்கள் கண்களை உங்கள் பக்கம் திருப்பும். உங்கள் வசீகரத் தோற்றம் வெளிப்படும். பேச்சாற்றல் வெளிப்படக்கூடிய நாள். கெட்ட பெயர் எடுத்த இடத்தில் நல்ல பெயர் வாங்க கூடிய நாளாகவும் இருக்கப் போகிறது, சந்தோஷம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். அனுபவங்களை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து நடக்கவும். நேரத்தை வீணடிக்க வேண்டாம். கைபேசி அதிகமாக பார்க்க வேண்டாம். அடுத்தவர்கள் வாழ்க்கையில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனை இருக்கும். யோசிப்பதிலேயே இன்று பாதி நேரம் வீணாகும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் இருக்காது. ஒரு நாளை வீணடித்த பாவம் உங்களுக்கு தேவையா. நிச்சயம் கூடாது. சிந்தனையில் இருந்து வெளிவந்து உடனடியாக வேலையை கவனிக்க தொடங்கி விடுங்கள். எந்த யோசனைக்கும் போகாதீங்க. போனது போகட்டும்னு விட்டுடுங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். வேலையில் நல்ல வரவேற்பு மரியாதையும் கிடைக்கும். வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாக இருக்கும். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்களோடு நல்ல ஒரு உறவு வைத்துக் கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். இன்று உங்களுக்கு வியாபாரத்தில் பொறுமை தான் தேவை.
Tags:
Rasi Palan