2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு..!!!



2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06) மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது.

2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7:00 மணிக்கு நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமானது.

வாக்குப்பதிவு மாலை 4:00 மணி நிறைவடைந்த நிலையில், 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

இந்த முறை தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிலிருந்து 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் 8,287 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here