மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மன அமைதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்வீர்கள். நிம்மதியான வாழ்க்கை நிம்மதியான தூக்கம் சந்தோஷமான குடும்பம் இப்படியே உங்களுடைய வாழ்க்கை இன்று செல்லும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் திறமையாக செயல்படுவீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். புதுசாக வங்கி கணக்கு துவங்குவது, சீட்டு போடுவது இதுபோல முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் சின்ன வேலை செய்தால் கூட மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். மனதில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று வேலையில் சுறுசுறுப்போடு இருப்பீர்கள். கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். தேவையில்லாமல் நேரத்தை செலவு செய்ய மாட்டீர்கள். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று இருந்தால், அந்த நாள் எப்படி இருக்கும் என்று நன்றாக கற்றுக் கொள்வீர்கள். அனுபவ பாடங்களை படிப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். அடுத்தவர்களுடைய பிரச்சனைகளை கேட்டு அதற்கான முடிவை கொடுக்கக்கூடிய வாய்ப்புகளும் அமையும். அடுத்தவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். மன நிம்மதியை அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். நீண்ட நாள் குழப்பத்தில் இருந்து வெளி வருவீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்க்ஷ வியாபாரத்தை பொருத்தவரை பொறுமை தேவை.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். சோம்பேறித்தனத்தை விட்டு நீண்ட நாள் முடிக்க முடியாத வேலைகளை எல்லாம், முயற்சி எடுத்து இன்றைய தினம் சரியாக செய்து முடிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உயர்ந்த இடத்தை பிடிப்பீர்கள். அம்மா அப்பாவின் ஆசிர்வாதத்தோடு இந்த நாள் இனிமையாக துவங்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் சந்தேகத்திற்கு, குழப்பத்திற்கு விடை கிடைக்கும். மனம் தெளிவாகும். உங்களுடைய தவறு என்ன என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். அடுத்தவர்களுடைய மன நிலைமையை புரிந்து கொள்வீர்கள். கடவுள், மூடியிருந்த உங்கள் கண்களை இன்று திறந்து வைப்பார். எல்லாம் நல்லபடியாக நடக்கும். இன்று தவறுகளை திருத்திக் கொள்ளக் கூடிய நாளாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். நினைத்த வேலையை நடத்தி முடிப்பீர்கள். பேச்சாற்றல் திறமை வெளிப்படும். மனதில் ஒரு துளி அளவும் பயம் இருக்காது. குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். நிதி நிலைமை சீராகும். நீண்ட நாள் வாரா கடன் வசூலாகும். நிம்மதி பிறக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். முக்கியமான விஷயங்களை மறந்து விட்டு, யாரிடமாவது திட்டுவாங்க வாய்ப்புகள் உள்ளது. முக்கியமான வேலை மீட்டிங் ஏதாவது இருந்தால் ஒரு நோட்டு பேப்பர் எடுத்து வேலைகளை குறித்து வைப்பது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் நஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். நிறைய பணம் செலவு செய்து எந்த பொருளையும் வாங்காதீங்க.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று ஏமாற வாய்ப்புகள் இருக்கிறது. ஐயோ பாவம் என்று யாராவது வந்து அழுது கொண்டே உதவி என்று கேட்டால் கூட, யோசித்து உதவி செய்யுங்கள். முன்பின் தெரியாதவர்களுக்கு உதவி செய்யாமல் இருப்பது நல்லது. குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் இருக்கட்டும் . இரக்க குணம், உங்களை ஏமாற்றலாம் ஜாக்கிரதை.
Tags:
Rasi Palan