மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருந்த ஆசையை வெளிப்படுத்துவீர்கள். காதல் கை கூடும். பிரிந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் துவங்கும். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமான போக்கில் செல்லும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே இன்று கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும். எல்லா விஷயத்திற்கும் போட்டி பொறாமை வேண்டாம். விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும். பேராசைப்படக்கூடாது. சீக்கிரத்தில் பணக்காரர் ஆகிவிடலாம் என்று குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கக் கூடாது. அரசாங்கத்திற்கு புறம்பான காரியங்களை செய்யக்கூடாது. நேர்மையாக நடந்தால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுக்கு நடக்கக்கூடிய நல்ல விஷயங்களை வெளிப்படையாக எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை பிரித்து ஆராய்ந்து பழகுங்கள். எதிரிகளை எக்காரணத்தைக் கொண்டும் நம்பாதீர்கள். கவனத்தோடு செயல்பட்டால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். உங்களுக்கான பொறுப்புகள் கொஞ்சம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். இரக்க குணம் வெளிப்படும். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றபடி இந்த நாள் இனிய நாளாகவே இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வாரா கடன் வசூல் ஆகும். நிதி நிலமை சீராக இருக்கும். வேலையிலும் வியாபாரத்தையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம் நல்லதே நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். கூடுமானவரை தேவையில்லாத பொருட்களை இன்று பணம் கொடுத்து வாங்காதீங்க. அவசியமான விஷயம் என்றால் கூட, ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். துணிச்சலாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். நீங்கள் எடுக்கும் புது முடிவுகள், உங்கள் வாழ்க்கையை நல்ல முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பக்குவம் அதிகரிக்கும். மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவீர்கள். மன பாரத்தை குறைத்துக் கொள்வீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப் போகிறது. உங்களை எதிர்த்து பேசியவர்கள் கூட, உங்கள் முன்பு வந்து பணிவோடு நிற்பார்கள். உறவுகள் நண்பர்களோடு இருந்து வந்த சின்ன சின்ன சண்டைகள் கூட சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். விவசாயிகளுக்கு இன்று கூடுதல் நல்ல பலன் கிடைக்கப்போகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சிந்தனை அதிகமாக இருக்கும். யோசனை யோசனை என்று உங்களுடைய கடமையிலிருந்து தவறி விடவேண்டாம். கடமையில் கூடுதல் கவனம் தேவை. தேவையே இல்லாத சிந்தனையை ஒதுக்கி வைத்து விட்டு, தேவையான விஷயங்களை மட்டும் சிந்தித்து செயல்படுத்துங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல சுறுசுறுப்பு இருக்கும். தீராத துன்பங்கள் விலகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சில பேருக்கு உறவுகளை விட்டு, சில காலம் பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை இருக்கும். காலம் அதை சரி செய்யும்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அன்பு பாசம் காதல் வெளிப்படும் நாளாக இருக்கும். வாழ்க்கை துணை மீது அக்கறை அதிகரிக்கும். வீட்டில் நீண்ட நாட்களாக செய்யாமல் போட்டு வைத்திருந்த வேலையை அக்கறை எடுத்து என்று செய்து முடிப்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். அந்த பொறுப்புகளை செய்து மனநிறைவும் கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
Tags:
Rasi Palan