யாழில் 3 மாதங்களில் 76 வர்த்தகர்களுக்கு 6,11,500 ரூபா தண்டம்..!!!



யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். மாவட்ட பாவனையாளர் அதிகார சபையால் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் பிரகாரம் 6 இலட்சத்து 11 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட இணைப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் 194 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த சுற்றிவளைப்புகளில் 76 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலமாக கோரப்பட்ட தகவலுக்கு அமைவாக அவர் இதனைத் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here