இன்றைய ராசிபலன் - 31.05.2025..!!!




மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எதாவது ஒரு வகையில் கை நிறைய பணம் வரும். நிதி நிலைமை சீராகும். சேமிப்பு உயரும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். வீட்டிற்கும் மனைவிக்கும் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நினைத்த வேலைகளை எல்லாம் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நல்ல பெயர் எடுப்பீர்கள். மன நிம்மதி இருக்கும். உறவுகளோடு இருந்த வந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்கவும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று வேலையிலும் வியாபாரத்திலும் அதிக ஆர்வத்தோடு இருப்பீர்கள். வேலையில் இருக்கும் பிரச்சனைகள், வியாபாரத்தில் இருக்கும் பிரச்சனைகளை எல்லாம் அலசி ஆராய்ந்து, ஒரு முடிவுக்கு கொண்டு வருவீர்கள். நீண்ட நாள் குழப்பங்கள் தெளிவடையும். இன்று குழப்பத்திற்கு தீர்வு காணும் நாள். பிரச்சனைக்கு விடிவுகாலம் பிறக்கும் நாள்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். சேமிப்பு கரைவதற்கு வாய்ப்பு உள்ளது. கவலைப்படாதீங்க, அனாவசிய செலவாக எதுவுமே இருக்காது. எல்லாம் அவசிய செலவாக தான் இருக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். மன அமைதி கிடைக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். உறவுகளால் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிசாக டென்ஷன் இருக்காது. உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடித்து விடுவீர்கள். புது விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். பண பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். மன நிம்மதியை அடைவீர்கள். வேலையில் சின்ன சின்ன டென்ஷன் வரலாம். இருந்தாலும் இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். வியாபாரத்தை பொருத்தவரை நிதானம் தேவை. அவசர முடிவுகள் கூடாது ‌

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கோபம் கொஞ்சம் அதிகமாக வரும். இதனால் நல்ல விஷயங்களை இழக்கக்கூடிய வாய்ப்புகள் வரலாம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. முன்பின் தெரியாத நபரை நம்ப வேண்டாம். உங்கள் வீட்டு பெரியவர்கள் சொல் பேச்சை கேட்கவும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவு இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். பெரியவர்களின் ஆசிர்வாதத்தால் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைத்து தலைவலியை வாங்கிக் கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. அடுத்தவர்கள் விஷயத்தில் இன்று தலையிட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். சில பஞ்சாயத்துகள் வாக்குவாதங்களில் இருந்து இன்று ஒதுங்கி இருப்பது நல்லது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சேமிப்பு கரைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதிகமாக யோசித்து யோசித்து மண்டையை குழப்பிக் கொள்ள வேண்டாம். வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தை பொருத்தவரை வருமானம் தேவையான அளவு வரும். மனதை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துங்கள். மூன்றாவது நபர் பேச்சை கேட்டு குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனை சரியாகும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனக்குறைவோடு இருக்க வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் தேடிவரும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். உங்களை தவறாக புரிந்து கொண்ட நபர்கள் எல்லாம் சரியாக புரிந்து கொள்வார்கள். அடுத்தவர்களுடைய நலனில் நீங்கள் அதிகமாக அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். சுப செலவுகள் ஏற்படும்.
Previous Post Next Post


Put your ad code here