மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனைகள் அதிகமாக இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய கவலை இருக்கும். இதனால் வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது. லேசான தலைவலி டென்ஷன் வரும். மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள். நடந்தது எதையும் நம்மால் மாற்ற முடியாது. ஆகவே இனி நடக்க வேண்டிய வேலைகளை மட்டும் பார்த்தால் போதும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிக பணத்தை எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். நிறைய பணம் கொடுத்து எந்த ஒரு பொருளையும் வாங்க வேண்டாம். நிதானதோடு இருங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஏதாவது ஒரு வகையில் வருமானம் வரும். உங்களுடைய சேமிப்பு உயரும். நிதிநிலைமை சீராகும். கடன் பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கே நிலவும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று முன்னேற்ற பாதையில் பயணம் செய்வீர்கள். நீங்கள் மேற்கொள்ள கூடிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உறவுகளோடு இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். மன பாரம் குறையும். மனதிற்கு பிடித்தவர்களோடு நேரத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கும். வேலையில் உங்களுடைய திறமை வெளிப்படும் நாள். வியாபாரத்தை பொருத்தவரை அதிகமாக முதலீட்டை செய்ய வேண்டாம். உழைப்பை முதலீடு செய்தால் மட்டும் போதும். உங்களுக்கான பலன் நிச்சயம் கிடைக்கும். முன்பின் தெரியாத நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். குடும்ப விஷயங்களை வெளி ஆட்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று அதிர்ஷ்டமானவர்களாக வலம் வருவீர்கள். உங்களுடைய அழகு மேம்படக்கூடிய நாளாக இருக்கும். பேச்சாற்றலின் மூலமாகவே நீங்கள் நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொள்வீர்கள். வசீகரத் தோற்றம் என்பது ஒரு வரம். தெய்வீக கடாட்சம் ஹ ஆகவே அதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். இன்று யோகமான நாள். நீங்கள் எதைத் தொட்டாலும் அது பொன்னாக மாறும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தனம் தானியம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் பொருளாதாரம் முன்னேற்றம் உயரும். வீட்டில் இருப்பவர்களுடைய பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். மன நிம்மதி பிறக்கும். கடன் சுமை தீரும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரிடம் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வேலையில் நிம்மதி பிறக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பமும் சிக்கலும் இருக்கும். எந்த வேலையை முதலில் செய்வது, எந்த பிரச்சினையை முதலில் பார்ப்பது என்று சிந்தித்தே, இந்த நாள் முடிந்து விடும். மனதை தளர விடக்கூடாது. போராடக் கூடிய குணம் உங்களிடத்தில் இன்று தேவை. அப்போதுதான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்வதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. மனமகிழ்ச்சி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனை வரலாம். கவனம் தேவை.
Tags:
Rasi Palan