சிவகார்த்திகேயனின் 23வது படமான மதராசியின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டுத் திகதி இந்த ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் திகதி என இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளது. இதற்காக படக்குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
“சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோர் பங்கேற்கும் முக்கிய க்ளைமாக்ஸ் காட்சியை இலங்கையில் படமாக்கவுள்ளனர்.
15 முதல் 20 நாட்கள் இவங்கையில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதராசியின் படப்பிடிப்பு 2024 பெப்ரவரியில் தொடங்கி சென்னை, புதுச்சேரி மற்றும் தூத்துக்குடியில் படமாக்கப்பட்டது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
சுதீப் இளமோன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மதராசி படத்தில் பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதற்கிடையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் முக்கியக் காட்சிகளும் இலங்கையில் படமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
cinema news