“இது ஒரு புண்ணிய பூமி“ – முள்ளிவாய்க்காலில் சிங்கள இளைஞனின் உருக்கமான பதிவு..!!!


தெற்கில் உள்ள சிங்கள மக்கள் வடக்கிற்கு செல்ல மே 18ஆம் திகதியே சிறந்த நாள் என முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து சிங்கள இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இன்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற பின்னர், பேஸ்புக் காணொளி ஊடாக பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் இருக்கின்றோம். இது ஒரு புண்ணிய பூமிபோன்று தெரிகிறது. உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து அவர்களது உறவினர்கள் சுடர் ஏற்றி வழிபடுகின்றனர்.

ஆனால் கடந்த 16 வருடங்களுக்கு முன்னர் இந்த புண்ணிய பூமியில், இடம்பெற்ற இறுதிப் போரின் போது, ஐக்கிய நாடுகளின் சபை தகவலுக்கமை 70,000 பேர் வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

உத்தியோகப்பூர்வ தகவல்களுக்கமைய 150,000 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வெறும் அப்பாவி குடிமக்களே கொல்லப்பட்டனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

உயிரிழந்தவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்காத மக்கள் இங்கு வருகைத்தந்து அவர்களை நினைவு கூறுகின்றனர். இந்நிலையில், தெற்கில் உள்ளோர் வடக்கிற்கு செல்ல மே 18 ஆம் திகதியே சிறந்த நாள் என்று” அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here