தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?




நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைக் குவித்து நல்ல வசூலை ஈட்டியுள்ளது. 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இதையடுத்து கவனிக்கப்படும் இயக்குனராக ஆன விக்னேஷ் ராஜா அடுத்து தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் அர்ஜுன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புக்கான செட் அமைக்கும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சமீபத்தைய கனவுக்கன்னி நடிகை கயாடு லோஹர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here