
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைதன் பெற்றது. தமிழ்நாட்டைத் தவிர இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைக் கொடுக்கவில்லை.
உலகளவில் இந்த படம் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படம் ரிலீஸாகி நான்காவது வாரம் தொடங்கியுள்ளதாலும், அடுத்தடுத்து ரெட்ரோ மற்றும் டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருவதாலும் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து ‘குட் பேட் அக்லி’ தூக்கப்பட்டு விட்டது.
இதையடுத்து மே 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிவருகிறது. இதையடுத்து நெட்பிளிக்ஸின் ‘முதல் 10 ஆங்கிலப் படங்கள் அல்லாத படங்களின்’ டிரண்டிங்கில் இணைந்துள்ளது. அதே போல படம் வெளியான போது வரவேற்புக் கிடைக்காத தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மாநிலங்களிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
Tags:
cinema news