இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டெஸ்ட் ஓய்வு குறித்து தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள விராட் கோலி,
“ டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுப்பது எளிதானது அல்ல, நான் என்னிடம் இருந்த அனைத்தையும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக கொடுத்துள்ளேன், இது நான் எதிர்பார்த்ததை விட எனக்கு அதிகமாக திருப்பித் தந்துள்ளது. நான் எப்போதும் என் டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்’’ என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் இந்திய வீரர் ரோகித் ஷர்மா டெஸ்ட் போட்டியில் ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது விராட் கோலியும் ஓய்வை அறிவித்துள்ளார்.
விராட் கோலி இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9230 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 30 சதம், 31 அரைசதம் அடங்கும். ஆட்டமிழக்காமல் 254 ஓட்டங்களை அடித்தமை ஒரு இன்னிங்சில் அதிகபட்ச விராட் கோலியின் டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கை ஆகும்.
Tags:
Sports News