நீரில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழப்பு..!!!


விடுமுறைக்காக உறவினரின் வீடொன்றுக்கு சென்ற மீரிகம மற்றும் இரத்தினபுரி பகுதிகளைச் சேர்ந்த 17, 12 வயது சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று (13) பகல் கல்கமுவ பகுதியில் உள்ள பாழுகடவல வாவியில் நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே இருவரும் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களின் சடலங்கள் தற்போது கல்கமுவ மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
Previous Post Next Post


Put your ad code here