வாகன இறக்குமதி – சில கட்டுப்பாடுகள் நீக்கம்..!!!


வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இதனூடாக, இறக்குமதி செய்யப்பட்டும் பல்வேறு காரணங்களால் விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் காணப்படும் பல வகையான கார்களை விடுவிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களாக இந்த வாகனங்களை எங்களால் விடுவித்துக்கொள்ள முடியவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

Hybrid Toyota Raize மற்றும் Hybrid Nissan X-TRAIL புதிய வர்த்தமானி வௌியிட்டதன் காரணமாக, இப்போது அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பதிவு செய்யப்படாத புதிய மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here