யாழில் காணி விடுவிப்பு..!!!


யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஒரு தொகுதி காணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத் யாழ் மாவட்ட செயலர் ம.பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள், செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

வசாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணிகளும் மாங்கொல்லை பகுதியில் 15 ஏக்கர் நிலங்களும், திக்கம் பகுதியில் 5 ஏக்கர் காணி நிலமுமாக சுமார் 40 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மேலதிக அரச அதிபர் (காணி) ஸ்ரீமோகன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர், பருத்தித்துறை பிரதேச செயலர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்.
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');