யாழில். திருமணம் செய்து ஒரு மாதத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!



யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 09.04.2025 அன்று கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை பேச்சு திருமணம் செய்துள்ளார் இந் நிலையில் ஒரு மாதகாலமாக மகிழ்ச்சியாக வாழ்ந்த குடும்பத்தில் நேற்றைய தினம் தீடிரென பெரும் துயரச்சம்பவம் இடம் பெற்றது

உறவினர் ஒருவர் வழங்கிய விருந்து ஒன்றுக்கு சென்ற நிலையில் இரவு வேளையில் தம்பதிகள் வீடு திரும்பிய நிலையில் தீடிரென மயக்கமுற்ற இளம் குடும்பஸ்தர் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் ,

சம்பத்தில் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த பரஞ்சோதி சதீஸ் என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார் , சடலம உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சங்கானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்வம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here