இந்தியா, பாகிஸ்தான் ; மீண்டும் தாக்குதல்..!!!


போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சிலமணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த இராணுவ தாக்குதல்கள் இன்று மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது.

இந் நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகள் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்வையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நிறுத்த உடன்பாட்டை மீறி இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சண்டை நிறுத்தம் என்று இரு நாடுகளும் அறிவித்த 3 மணி நேரத்தில் கதுவா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் தொடர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது;

சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் காஷ்மீரில் குண்டுசத்தம் கேட்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here