“வடக்கில் காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை அநுர அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி யாழ். மண்ணுக்கு வர முடியாமல் அல்லது கால் வைக்க முடியாமல் செய்வோம்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.