அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவி விக்னேஸ்வரன் நர்த்திகா மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதரிகுடா கிராமத்தில் வசித்து வருகின்ற மாணவி விக்னேஸ்வரன் நர்த்திகா முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் தனது மூன்று வயதில் இராணுவத்தினரின் எறிகணைகள் தாக்குதலில் தனது தந்தையாரை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வருகிறார்.
ஆரம்பக்கல்வியை முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் கற்ற விக்னேஸ்வரன் நர்த்திகா உயர்கல்வியை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் கல்வி கற்று உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.
இந்நிலையில் அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2A B பெறுபேற்றினை பெற்று பொறியியல் உயிரியல் துறையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்