இன்றைய ராசிபலன் - 01.06.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று அயராமல் உழைத்து உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். எல்லா விஷயத்திலும் கூடுதல் பொறுப்பு இருக்கும். காலையில் முருகர் கோவிலுக்கு சென்று பிறகு, உங்கள் முயற்சிகளை மேற்கொண்டால் மேலும் மேலும் நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மனது சந்தோஷம் அடையும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. மனதிற்கு பிடித்த விஷயங்கள் இன்று நடக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பையும் அதிகரிப்பீர்கள். சின்ன சின்ன விஷயங்கள் முதல் பெரிய பெரிய விஷயங்கள் வரை சரியாக பிளான் பண்ணுவீங்க. அடுத்தவர்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் நீங்கள் ஆதரவாக இருப்பீர்கள்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வு இருக்கும். உடல் அசதி இருக்கும். கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும். இருந்தாலும் சில கடமைகளை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். அதையும் நீங்கள் செய்து முடிப்பீர்கள். மன உறுதி அதிகமாக இருக்கும். இறைவனின் ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பண வரவு சீராக இருக்கும். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தோடு திருவிழா திருமணம் இது போன்ற கொண்டாட்டம், சுப விசேஷங்களில் கலந்து கொண்டு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் சிந்திக்கக் கூடாது. உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். அதிக நேரம் கைபேசி பார்த்து நேரத்தை செலவு செய்ய மாட்டீர்கள். இந்த விடுமுறை நாளை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே, அடுத்த ஒரு வாரம் உங்களுடைய வாழ்க்கை பிரச்சனை இல்லாமல் செல்லும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப நலமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் நீங்கும். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். நிம்மதியாக வேலையையும், வியாபாரத்தையும் கவனித்துக் கொள்வீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று ஆக்கப்பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களில் ஈடுபடுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனது ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வத்தை காட்டும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். நிறைய நன்மைகள் நடக்கும். உங்களுடைய கடமைகளில் இருந்து நீங்கள் தவறாமல் நடத்திக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடவும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கொஞ்சம் பிரச்சனைகள் வந்து போக வாய்ப்பு உள்ளது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். உங்களுடைய வேலையில் ஆர்வம் இருக்கும். எந்த விஷயத்திலும் பொய் சொல்ல மாட்டீர்கள். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனால் கிடைக்கும் நல்ல பெயர் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்வது நல்லது. வீண் செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த, உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தேவைக்கு ஏற்ப ஓய்வு எடுக்கவும். அதிக நேரம் கைபேசி பார்க்க வேண்டாம். முன்கோபத்தை குறைக்கும் போது, கூடுதல் நன்மையை பெறலாம்.
Previous Post Next Post


Put your ad code here