மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். மனநிறைவோடு இந்த நாளை முடித்துக் கொள்ளுங்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று அமைதியாக உங்களுடைய வேலையை பார்ப்பீர்கள். பெருசாக உங்களுக்கு கோபம் இருக்காது. மேலதிகாரிகளுடன் நல்ல நட்புறவு ஏற்படும். கடன் சுமை தீரும். வருமானம் சீராகும். பிள்ளைகளுடைய படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரியவர்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் காட்டுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் கவனம் செலுத்தினால் போதும். புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்த பிரச்சனைக்கும் பெரியதாக உணர்ச்சிவச படாதீர்கள். பொறுமையாக இருங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனையில் தலையிட மாட்டீர்கள். நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் நிதானதோடு சிந்தித்து சில முடிவுகளை எடுப்பதன் மூலம் எதிர்பாராத பிரச்சனைகள் தடுக்கப்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளி வருவீர்கள். நிம்மதியான தூக்கம் நிம்மதியான சாப்பாடு என்று இந்த நாள் இனிமையான நாளாக செல்லும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். உயர் பதவிகளும் உங்களை தேடி வரும். மதிப்பு மரியாதையும் உயரும். விவசாய தொழிலில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ளவும். வியாபாரத்தை பொருத்தவரை பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்க கூடாது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று மன அமைதியோடு இருப்பீர்கள். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். எதிரி தொல்லை நீங்கும். தவறாக புரிந்து கொண்ட வாழ்க்கை துணையை, சரியாக புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் நிதானத்தோடு முடிவு எடுக்க வேண்டும். எந்த அவசரமும் வேண்டாம். புது மனிதர்களின் நட்பில் ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை அனுபவரீதியாக கற்றுக் கொள்வீர்கள். புதிய மனிதர்களின் நட்பு உங்களுக்கு நல்ல பாடங்களை சொல்லிக் கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் சந்தோஷமாக அமையும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கோபத்தோடு நடந்து கொள்வீர்கள். எதிலும் நிதானமாக இருக்க மாட்டீர்கள். இதனால் சில பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். நல்ல மனிதர்கள் நல்ல நண்பர்களின் நட்பை இழக்க வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருக்கவும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். நிறைய செலவு செய்வீர்கள். கையில் இருக்கும் சேமிப்பு கரைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனதிற்கு பிடித்த நபருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலை வியாபாரத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நேரத்தை அனாவசியமாக செலவு செய்யாதீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். பெரியதாக பிரச்சனைகளை எதிர்கொள்ள மாட்டீர்கள். இருந்தாலும் வேலையிலும் வியாபாரத்திலும் கவனத்துடன் நடக்க வேண்டும். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க கூடாது. அந்தந்த வேலையை அந்தந்த நேரத்திற்கு முடித்தால் எந்த பிரச்சனையும் இல்லை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் இன்று வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணங்களில் மூலம் நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கிய ரீதியாக பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். மேலதிகாரிகளோடு நல்ல நட்புறவு இருக்கும்.
Tags:
Rasi Palan