மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நன்மைகள் நடக்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் சரியாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று விடுமுறை நாளாகவே இருந்தாலும் உங்களுடைய கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை கூடுதல் உழைப்பை போட வேண்டும். அப்போதுதான் கூடுதல் லாபத்தை பெற முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். விருந்தாளிகள் வீட்டிற்கு, குடும்பத்தோடு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். இந்த நாள் நல்ல சாப்பாடு நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று சந்தோஷமாக நகர்ந்து செல்லும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். பண பற்றாக்குறை ஏற்படும். சில பேருக்கு கடன் வாங்கக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும். குடும்பத்தை சமாளிக்க சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். வேலை வியாபாரத்தை பொருத்தவரை பெரிசாக எந்த பிரச்சனையும் இல்லை. அந்தந்த வேலைகள் அப்படியே நடக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை சரியான நேரத்திற்கு முடித்து கொடுப்பீர்கள். வேலையில் ஏற்பட்ட கெட்ட பெயரை சரி செய்து கொள்வீர்கள். மேலதிகாரிகளோடு நல்ல பெயர் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. கடன் சுமை தீரும். நிதி நிலைமை ஏற்படும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை செலவழிக்க கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது. அடுத்தவர்கள் பேச்சை கண் மூடித் தனமாக நம்ப கூடாது. உங்களுடைய வேலைகளை யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். முன்கோபம் வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மன குழப்பம் இருக்கும். புது முடிவுகளை எடுப்பதில் சில பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. இந்த நாளை பொறுமையாக கடந்து செல்வது நல்லது. சொந்த பந்தங்களோடு சண்டை போட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் சண்டை வேண்டாம். வியாபாரத்திலும் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதம் வியாபாரத்தில் பார்ட்னரோடு வாக்குவாதம், வாடிக்கையாளர்களோடு சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த விடுமுறை நாளை ரொம்பவும் சந்தோஷமாக செலவு செய்யப் போகிறீர்கள். உங்கள் கையில் இருக்கும் பணமும் சந்தோஷமாக செலவாகும். வீண் விரைய செலவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. கேளிக்கை கிண்டல், நீண்ட தூர பயணம் என்று இந்த நாள் இனிமையாக செல்லும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற அலைச்சல்கள் இருக்கும். தேவையில்லாத விஷயங்களை நீங்களே இழுத்துப் போட்டுக் கொள்வீர்கள். பிரச்சனைகளும் அதன் பின்னால் ஒவ்வொன்றாக வர துவங்கும். உங்கள் நிம்மதியை நீங்களே கெடுத்துக் கொள்ள வேண்டாம். கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத இடத்தில் பேசாதீங்க, தேவையில்லாத விஷயத்தை பேசாதீங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் இருந்து வந்த கெட்ட பெயர் சரியாகிவிடும். தலைகுனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நடப்பீர்கள். வியாபாரத்திலும் வேலையிலும் நினைத்ததை விட நல்லது கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை நீங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். வீட்டு பெரியவர்கள் குழந்தைகளுடைய ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு சுறுசுறுப்போடு இருப்பீர்கள். ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். உங்களிடம் கொடுத்த வேலைகளை பொறுப்போடு நடத்தி முடிப்பீர்கள். கொஞ்சம் சுபசலவர்கள் ஏற்படும். இறைவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். தேவையற்ற டென்ஷன் குறையும்.
Tags:
Rasi Palan