இன்றைய ராசிபலன் - 19.06.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பண விரயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை செலவை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவில் எந்த முதலீடும் செய்ய வேண்டாம். வேலையில் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். குடும்ப விஷயத்தில் பொறுப்போடு இருக்க வேண்டும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரத்தை பொறுத்தவரை நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். அவசர முடிவு எடுக்காதீர்கள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். தேவையற்ற பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். வாரா கடன் வசூல் ஆகும் நிதிநிலைமை செயற்படும்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். எதிலும் தெளிவோடு ஒரு முடிவு எடுப்பீர்கள். வேலையில் கண்ணும் கருத்தோடும் நடந்து கொள்வீர்கள். நேரத்தை அனாவசியமாக செலவழிக்க மாட்டீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை லாபம் கை நிறைய கிடைக்கும். இரவு நல்ல தூக்கமும் வரும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். வீட்டில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகி ஒற்றுமை நிலவும். நிதி நிலைமை சீராகும். வியாபாரத்திலும் வேலையிலும் உங்களுடைய ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன போட்டி பொறாமைகள் இருக்கும். வேலை, வியாபாரத்தில் சின்ன சின்ன எதிர்ப்புகள் வரும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. பொறுமை தேவை. முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். எந்த விஷயத்திலும் மனதை அலைபாய விட வேண்டாம்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட நாட்களாக நடக்காத நல்ல காரியங்கள், உங்கள் வாழ்வில் இன்று நடக்கும். சுபசெலவர்கள் ஏற்படும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமைய வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் கெட்டி மேல சத்தம் கேட்கும்.

விருச்சிகம்


விருச்சக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. சின்ன சின்ன பின்னடைவு உண்டாகலாம். வியாபாரத்தை பொருத்தவரை நிதானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். எதிர்பாராத சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எந்த இடத்திலும் கோபமான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புதிய அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். ஆரோக்கிய ரீதியாக கூடுதல் கவனம் தேவை. நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நல்லது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் இரட்டிப்பாகும். லாபகரமான நாள். கடன் சுமை குறையும். வாரா கடன் வசூல் ஆகும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. சில பேருக்கு சொத்து சுகம் வாங்கவும் யோகம் இருக்கிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லுங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ராஜ உபச்சார வாழ்க்கை கிடைக்கும். செல்லும் இடமெல்லாம் மரியாதை கூடும். செல்வாக்கு அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத நல்லது நடக்க வாய்ப்புகள் இருக்கிறது. இந்த நாள் இனிய நாள்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று மிகவும் அமைதியாக இருப்பீர்கள். உங்களுடைய வேலையில் அக்கறையோடு நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களை பற்றி கவலை கொள்ள மாட்டீர்கள். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
Previous Post Next Post


Put your ad code here