இன்றைய ராசிபலன் - 21.06.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான அத்தனை நல்லதும் நடக்கும். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் நீங்கும். உங்கள் மீது இறைவனின் பார்வை விழுந்து விட்டது. இன்றைய நாள் இனிமையான நாளாக தான் இருக்கும். பெருமாள் வழிபாடு செய்யுங்கள் மேலும் நன்மைகளை அடைவீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் நீங்கும். மனம் மகிழ்ச்சி அடையும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் சரியாக நடக்கும். கடன் சுமை குறையும். வருமானம் இரட்டிப்பாகும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விடுவீர்கள். வேலை வியாபாரம் பற்றிய சிந்தனையை விட, உங்களுடைய வீட்டு சிந்தனை அதிகமாக இருக்கும். கவலைப்படாதீங்க இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிச்சயம் பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு கிடைக்கும். அன்றாட வேலையில் கூடுமானவரை கவனம் செலுத்துங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். சுகமான நாளாக இருக்கும். வீட்டில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் மன அமைதியை பெறுவீர்கள். சொந்த பந்தங்களிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். நிதி பற்றாக்குறை நீங்கும். வரவு அதிகரிக்கும்.

சிம்மம்


சிம்ம ராசி காரர்களுக்கு இன்றைய நாள் கடன் சுமையிலிருந்து வெளிவரக்கூடிய நாளாக இருக்கும். கோர்ட் கேஸ் வழக்குகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். சொத்து சுகம் வாங்க கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பல சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மனதை தைரியத்தோடு வைத்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு பிரச்சனைக்கும் உடைந்து போகக்கூடாது. எல்லாவற்றையும் சவாலாக நினைத்துக் கொண்டு, ஒரு கை பாருங்கள். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனது பொதுப்பணிகளில் ஈடுபடும். ஆன்மீக ரீதியான விஷயங்களை செய்வீர்கள். கோயிலுக்கு செல்லக்கூடிய பாக்கியமும் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த விரிசல் சரியாகும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நிதானம் தேவை. புதிய முதலீடுகளில் கவனம் தேவை.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். உங்கள் மனதில் பட்ட விஷயங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். தேவையற்ற எதிர்ப்புகள் பிரச்சனைகள், வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எதுவாக இருந்தாலும் நிதானமாக பொறுமையாக இருக்க வேண்டும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எல்லா இடத்திலும் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். விஐபி பட்டியலில் உங்கள் பெயர் இடம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது. வருமானம் பெருகும். வியாபாரத்தில் முதலீடுகளை அதிகப்படுத்தலாம். நன்மை நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனது சந்தோஷமாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள், நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. பழைய காதலியை சந்தித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மனதிற்கு பிடித்த நபருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நிறைய நல்ல அனுபவங்களை கற்றுக் கொடுக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு என்னென்ன நல்ல விஷயங்கள் எல்லாம் தேவையோ, அதையெல்லாம் தேடித் தேடி கற்றுக்கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் துன்பத்திலிருந்து இன்று விடுதலை காண்பீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகமும் மனக்கவலையும் இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. ஏதோ ஒரு டென்ஷன் உங்களை துரத்திக் கொண்டே இருக்கும். இருந்தாலும் உங்களுடைய தைரியத்தை விடாதீங்க. விடாமல் முயற்சியோடு போராடுங்கள். நன்மை நடக்கும்.
Previous Post Next Post


Put your ad code here