இன்றைய ராசிபலன் - 22.06.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதிற்கு பிடித்த நல்ல விஷயங்கள் நடக்கும்‌. காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. சந்தோஷமாக இந்த நாளை செலவு செய்வீர்கள். வேலையில் வியாபாரத்தில் பிரச்சனை வந்தாலும் மனது அந்த பக்கம் திரும்பாது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வேலையில் படு சுறுசுறுப்பு இருக்கும். வியாபாரத்தில் இன்றே மொத்த லாபத்தையும் சம்பாதித்து பையில் போட்டுக் கொள்ளலாம் என்று பரபரப்போடு வேலை செய்வீர்கள். உற்சாகம் கொஞ்சம் கூட, குறையவே குறையாது. அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலும், ஆர்வம் காட்டுவீர்கள். மனநிம்மதி கிடைக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றி அடையும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடலாம். புதுசாக சொத்து சுகம் வாங்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். வண்டி வாகனம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் இன்று, பிள்ளையார் சுழி போடுங்கள் எல்லாம் நல்லதாக நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று வாழ்க்கையில் அடுத்த படிக்கு காலை எடுத்து வைப்பீர்கள். முன்னேற்றத்திற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் கடவுள் உங்களுக்கு பக்கத்துணையாக இருப்பான். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ரொம்பவும் பர்சனல் ஆன விஷயத்தை வெளி ஆட்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற டென்ஷன் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கையில் எடுத்த வேலை சரியாக முடியாது. கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பின்னடைவு உண்டாகும். விடுமுறை நாளாகவே இருந்தாலும் உங்களுடைய இந்த நாள் பரபரப்பாகவே செல்லும். கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. அதிகம் செலவு செய்யாதீர்கள். அடுத்தவர்களை நம்பி பணத்தை யாருக்கும் கொடுக்காதீர்கள். பெரிய முதலீடு செய்ய வேண்டாம். அன்றாட வேளையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு கொஞ்சம் சேமிப்பும் தேவை. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய அனுபவரீதியான பாடங்கள் கிடைக்கும். சின்ன சின்ன தோல்விகள் ஏற்பட்டாலும், அதன் மூலம் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க நண்பர்களும் உறவினர்களும் வாழ்க்கை துணையும் உதவியாக, உறுதுணையோடு பேசுவார்கள். ஆறுதலான நாள் இன்று.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும். வருமானம் பெருகும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வியாபாரத்தில் வேலையிலும் கூடுதல் கவனம் தேவை. நேரத்தை செலவு செய்து அரட்டை அடிக்க கூடாது. ஜாக்கிரதை, இளைஞர்கள், சின்ன பிள்ளைகள் எல்லாம் பெரியவர்கள் பேச்சை கேட்டு நடக்க வேண்டும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் தீரும். மன அமைதி கிடைக்கும். நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு கடவுள் ஒரு முற்று புள்ளி வைப்பான். வண்டி வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. முன்பின் தெரியாத நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம், வரவு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். வியாபாரத்தை பொருத்தவரை நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கையும் இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். வருமானம் இரட்டிப்பாகும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்களின் போது மட்டும் கவனம் தேவை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று விடுமுறை நாளாகவே இருந்தாலும், கொஞ்சம் பரபரப்பு நாளாக இருக்கும். வேலை சுமை அதிகமாக இருக்கும். முன்கோபம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். ஜாக்கிரதை, வியாபாரத்திலும் முதலீட்டிலும் நிதானம் தேவை.
Previous Post Next Post


Put your ad code here