மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வசதி வாய்ப்புகளும் சந்தோஷமும் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். உங்களை தேடி அதிர்ஷ்ட காற்று வீசப் போகிறது. நீங்கள் இழந்த பொன் பொருள் சொத்துக்களை எல்லாம் மீண்டும் மீட்டு எடுப்பதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்வி, சின்ன சின்ன அனுபவங்கள் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான ஊக்கத்தை நீங்கள் பெறுவீர்கள். இனிமேலாவது இந்த தவறை செய்யக்கூடாது என்று ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் இன்று ஒரு புது அனுபவம் கிடைக்கும். ஆகவே தோல்வியை கண்டு இன்று நீங்கள் துவண்டு போகவே கூடாது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். அந்தந்த வேலைகள், அந்தந்த நேரத்தில் நடக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் நல்ல ஓய்வு கிடைக்கும். விடுமுறை நாள் என்பதால் குடும்பத்தோடு சந்தோஷமாக என்ஜாய் பண்ணுவீங்க. கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். அவ்வளவுதான்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுபீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று சுறுசுறுப்பு அதிகமாக இருக்கப் போகிறது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். நேரம் போவதே தெரியாது இன்று. கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று விடுமுறை நாளாக இருந்தாலும் ஓய்வு கிடைக்காது. வேலை வியாபாரம் என்று பிசியாக இருக்க போறீங்க. உழைப்பு உழைப்பு என்று உங்கள் நாள் ஓட போகிறது. ஆனால் கவலை வேண்டாம். உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் உங்களுக்கு கிடைக்கும். நல்ல வருமானத்தை பெறப்போகிறீர்கள். நல்ல ஆரோக்கியமும் உங்களுக்கு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த இடங்களுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். வெளியூர் பயணங்கள் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். மனதிற்கு நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லேசான குழப்ப நிலை உண்டாகும். இக்கட்டான சூழ்நிலையில் என்ன முடிவு எடுப்பது என்ற சூழ்நிலை சில பேருக்கு வரலாம். தடுமாற்றமான சூழ்நிலையில் எந்த புது முடிவும் எடுக்காதீங்க. அவசரப்படாதீங்க, முன் கோபப்படாதீங்க. பெரியோரின் ஆலோசனையின் படி உங்களுடைய முக்கியமான வேலைகளில் முடிவு எடுப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் இரட்டிப்பாகும். கடன் சுமை குறையும். சேமிப்பு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் சேர்க்கையும் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சந்தோஷம் பிறக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நன்மைகள் நடக்கப் போகிறது. புதுசாக நீங்கள் துவங்க வேண்டும் என்ற விஷயங்களை இன்று துவங்கலாம். வியாபாரத்திலும் வேலையிலும் எதிர்பாராத அளவு நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரச்சனையாக இருந்து வந்த பல விஷயங்கள் இன்று சரியாகிவிடும். கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களை பார்க்கும் போதே அடுத்தவர்களுக்கு பொறாமையாக இருக்கும். இதுபோல நாமும் வேலை செய்ய மாட்டோமா என்று. அந்த அளவுக்கு அழகும் வசீகரமும் கூட உங்களுக்கு வெளிப்பட போகிறது. நடக்கவே நடக்காத வேலைகளை கூட பேசிப்பேசியே இன்று நடத்தி காட்டி விடுவீர்கள். திறமை வெளிப்படும் நாள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளப் போகிறீர்கள். உங்களுடைய வேலைகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். காரிய வெற்றி கிடைக்கும். ரொம்பவும் பிரச்சனை கொடுக்கும் நபரை கூட சுலபமாக சரிகட்டும் அளவுக்கு உங்களுடைய பேச்சு திறமை வெளிப்படும். வேகமும் விவேகமும் சேர்ந்து செயல்படக்கூடிய நாள் இன்று. என்ஜாய் பண்ணுங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கிறது. உங்களுடைய தந்திர புத்தியின் மூலம் நிறைய நபர்களின் முகத்திரையை கிழிக்க போகிறீர்கள். சில மனிதர்களின் உண்மையான குணத்தையும் தெரிந்து கொள்வீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும்.
Tags:
Rasi Palan