யாழில் பொன் சிவகுமாரனின் 51 ஆவது நினைவுதினம்..!!!



தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 51 ஆவது நினைவுதினம் இன்று (05) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவு தூபியில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது சுடர் ஏற்றப்பட்டு, பொன் சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவுதின நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொன் சிவகுமாரனின் சகோதரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அதேவேளை யாழ். பல்கலை கழக வளாகத்திலும் இன்று , பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு மாணவர்கள் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
Previous Post Next Post


Put your ad code here