ஐ.பி.எல் வெற்றி கொண்டாட்டத்தில் உயிரிழப்புக்கள்; கூட்ட நெரிசலால் களேபரமான மைதானம்..!!!


ஐ.பி.எல் RCB வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்களால் வீழ்த்தி முதல் முறையாக RCB அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் நேற்று முதல் தற்போது வரை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

பெங்களூர் இல் இன்று 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் RCB வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் சின்னசாமி மைதானத்தை நோக்கி RCB ரசிகர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அங்கு பாரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் RCB வீரர்கள் வரும்வரை பொறுமையாக இருக்காமல் ஸ்டேடியத்தின் சுவர்கள் மற்றும் வேலிகளில் ரசிகர்கள் ஏறிச் செல்ல தொடங்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வெற்றிகொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here