உப்பை அதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..!!!



உப்பு இறக்குமதியாளர்கள் அதிக விலைக்கு உப்பினை விற்பனை செய்தால், உப்புக்கான உச்சபட்ச விலையை நடைமுறைப்படுத்த நேரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் உப்புக்கான தட்டுப்பாட்டு நிலவியதன் காரணமாக அதனை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

மாறாக வர்த்தகர்கள் இலாபமீட்டுவதற்காக அல்ல.

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கிலோ ஒன்று, 40 சதவீத வரியுடன் 77 ரூபா என்ற கிரய மதிப்பைக் கொண்டுள்ளது.

மொத்தவியாபாரிகள் 30 ரூபாய் வரையில் இலாபம் பெற அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன்படி ஒருகிலோ உப்பின் விலை 110 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படலாம்

அதனைத் தவிர்த்து அதிகவிலைக்கு விற்பனை செய்ய முயற்சித்தால், அரசாங்கம் அதற்கு எதிராக செயற்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here