வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு சிறுமிகளும் அடிமை..!!!


வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு சிறுமிகளும் அடிமையாகியுள்ளதாக வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நீதிமன்றினால் 15 வயது முதல் 18 வயது வரையிலான 36 சிறுவர்கள் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாகி நீதிமன்றத்தால் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் சிறுமிகளும் உள்ளடங்கியுள்ளனர் என தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here