வடக்கு மாணவர்கள் மத்தியில் போதை மாத்திரை பாவனை அதிகரிப்பு..!!!


வடக்கு பாடசாலை மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் தெரிவித்துள்ளார்.

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சந்தேகத்தில் அழைத்து வரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது.

உயிர்கொல்லி போதை மாத்திரையை வடக்குக்கு கொண்டு வரும் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்திடமிருந்து அந்த மாத்திரைகள் விநியோகிக்கும் சங்கிலியை கண்காணித்து சோதனை செய்தாலே இதனை இலகுவாக கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவித்தார்.

இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
Previous Post Next Post


Put your ad code here