எனது கனவை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி… RCB அணி குறித்து விஜய் மல்லையா நெகிழ்ச்சி!

 


17  ஆண்டுகளாக  பட்டம் வெல்லவில்லை என்றாலும் ஐபிஎல் அணிகளிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு அணியாக ஆர் சி பி அணி உள்ளது. அந்த அளவுக்கு கர்நாடகா தாண்டியும் அந்த அணிக்கு பரவலான ரசிகர் பட்டாளம் உள்ளது. அதனால் உலகம் முழுவதும் உள்ள ஆர் சி பி அணி ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த அணியை நிறுவியரும் அதன் முன்னாள் உரிமையாளர்களில் ஒருவருமான தொழிலதிபர் விஜய் மல்லையா அணிக் கோப்பையை வென்றது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “நான் ஆர் சி பி அணியை நிறுவிய போது அந்த அணிக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது என்னுடையக் கனவு. அதை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி. விராட் கோலியை அணிக்குள் எடுக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

விஜய் மல்லையா வங்கிக் கடன் மோசடி காரணமாக இந்தியாவை விட்டு வெளியேறி தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவரை இந்தியா அழைத்து வருவதற்கான வழக்குகள் இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

Previous Post Next Post


Put your ad code here