இன்றைய ராசிபலன் - 01.07.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைவாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்யலாம். புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். வேலையில் இருந்து வந்து டென்ஷன் குறையும். மேல் அதிகாரிகள் உடைய ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவு விலகி ஒற்றுமை நிலவும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடலாம். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் சேர்க்கை ஆபரண சேர்க்கை மகிழ்ச்சியை கொடுக்கும். மனைவிக்கு பிடித்தபடி பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் மன நிறைவான சந்தோஷம் பிறக்கும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வாய்ப்புகள் தேடி வரும். மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களுடைய திறமையும் வெளிப்படும் நாளாக இருக்கும். உறவுகளுக்கிடையே இருந்து வந்த மனக்கசப்பு சரியாகும். தவறான புரிதலும் சரியாகும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்போடு இருப்பீர்கள். வேலைகளை குறித்த நேரத்திற்கு முன்பாகவே முடித்து விடுவீர்கள். நல்ல ஓய்வு நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு இருக்கும். மனநிறைவான நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வரவு சந்தோஷத்தை கொடுக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். சொத்து சேர்க்கையும் சில பேருக்கு சந்தோஷத்தை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். இரவு நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல காரியங்கள் நடக்கும். நீங்கள் நினைத்த வேலைகளை எல்லாம் சரியாக செய்து முடிப்பீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். கணவன் மனைவிக்குள் மட்டும் நிதானம் தேவை. வாக்குவாதம் செய்யக்கூடாது சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். முன்கோபம் வேண்டாம். எதிரிகளாகவே இருந்தாலும் அவர்களை நிதானத்தோடு தான் நடத்த வேண்டும். மன்னிக்கும் பக்குவம் உங்களிடத்தில் வரவேண்டும். விட்டுக் கொடுக்கக் கூடிய குணம் இன்று தேவை. அப்போதுதான் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அதிரடியான நாளாக இருக்கும். எந்த வேலையை தொட்டாலும் பிரச்சனை. யாரிடம் போய் பேசினாலும் சண்டை, உங்களுடைய வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள் கிடைக்கப் போகிறது. பயப்படாதீங்க, பிரச்சனைகளை தைரியத்துடன் எதிர்கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூடும் நாள். தலை நிமிர்ந்து வாழக்கூடிய நாள். உங்களுடைய பெருமையை நிலைநாட்டுவீர்கள். குடும்பத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல நிறைய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதில் வெற்றியும் காண்பீர்கள். புதுப்புது அனுபவங்கள், புதுப்புது வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுடைய அருமை பெருமை இன்று அனைவருக்கும் தெரியும். ஒரு நாள் நீங்கள் இல்லை என்றால் அந்த இடத்தில் எவ்வளவு பிரச்சனைகள் எதிர்கொள்கிறார்கள் என்று புரிந்து கொள்வார்கள். வேலை வியாபாரத்தில் உங்களுடைய பெயர் கொடி கட்டி பறக்கும். அந்த அளவுக்கு உங்களுடைய உழைப்பும் இருக்கும். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கக்கூடிய நாள் இன்று.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று அயராது உழைப்பீர்கள். உங்களுடைய வேலையில் கவனத்தோடு நடந்து கொள்வீர்கள். மேலதிகாரிகளுடைய அனுசரணை உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய திறமையை வெளிப்படுத்தி காட்டுவீர்கள். பிரச்சனைகளில் சிக்கி இருக்கும் அடுத்தவர்களுக்கும் கை கொடுத்து உதவி செய்வீர்கள்.
Previous Post Next Post


Put your ad code here