மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். நினைத்த வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். மூன்றாவது நபரின் பேச்சை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். ஆரோக்கியத்தில் கூடுமானவரை கவனம் செலுத்த வேண்டும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிட வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். சில பல எதிரிகளுடைய தொல்லையும் இருக்கும். தேவையற்ற கண் திருஷ்டி விழ வாய்ப்பு உள்ளது. உங்களை நீங்கள் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். வேலையும் வியாபாரம் எப்போதும் போல சுமூகமாக செல்லும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். எதிரி தொல்லை விலகும். புது நண்பர்களின் சேர்க்கை நல்ல அனுபவங்களை கொடுக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். பிரச்சினைகளை கண்டு பயப்பட மாட்டீர்கள். பிரச்சனைகளை எதிர்கொள்ள கடவுள் உங்களுக்கு மன தைரியத்தை அதிகமாக கொடுத்து விடுவான். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெற்றி காண்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் புதிய முயற்சிகளை நாளை தள்ளி வைக்கலாம். தேவையில்லாத எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. குடும்ப விஷயங்களில் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் கூட அவசரம் வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற ஏமாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பெரிய எதிர்பார்ப்பை யார் மீதும் வைக்காதீங்க. இந்த நல்லது நடக்கும் அந்த நல்லது நடக்கும் என்று நினைத்துக் கொண்டு, கற்பனையில் கோட்டை கட்ட வேண்டாம். நடப்பது மட்டுமே நிஜம் என்று எண்ணி வாழ பழகிக் கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கப்போகிறது. புதிய நண்பர்களின் அறிமுகம் நல்ல நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும். தேவையில்லாத நண்பர்கள் உங்களை விட்டு தானாக விலகி விடுவார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் விலகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று வேலை வியாபாரத்தில் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் வேண்டும். கடன் வாங்க வேண்டாம். கடன் கொடுக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மட்டும் போதும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். வேலையில் ப்ரோமோஷன் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நேரத்திற்கு நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் இருக்கும். உங்களுடைய கடமைகளை எந்த ஒரு குறையும் இல்லாமல் சரியாக செய்வீர்கள். மாணவர்களுடைய கல்வியிலிருந்து வந்த தடைகள் விலகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் இரட்டிப்பாக பெருகும். நிதிநிலைமை சீர்படும். வாரா கடன் வசூல் ஆகும். மனநிறைவோடு இந்த நாளை கடந்து செல்கிறீர்கள். இறை வழிபாடு செய்யுங்கள். கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். பெரியவர்களிடம் ஆசீர்வாதமும் வாங்கிக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். உங்களுக்கு தேவையான நல்லது தானாக கையை வந்து சேரும். பெருசாக இன்று எந்த பிரச்சனையும் இல்லை. நிதிநிலைமை சீராக இருக்கும். வீட்டிற்கு மனைவிக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
Tags:
Rasi Palan