இன்றைய ராசிபலன் - 03.07.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூர பயணம் செய்யாதீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கிய ரீதியான பிரச்சினை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். வேலை வியாபாரத்தில் நிதானதோடு நடந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சேமிப்பு ஜாக்கிரதை. தேவையில்லாத பொருட்களை பணம் கொடுத்து வாங்க வேண்டாம். எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நன்மைகள் நடக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு தேவையான நல்லதை உடன் இருப்பவர்கள் பார்த்து பார்த்து செய்வார்கள். நல்ல ஆதரவு நிறைந்த நாள் இந்த நாள். சுற்றி இருப்பவர்களுடைய அருமை பெருமைகளின் நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளும் அனுபவம் கிடைக்கும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று நேரத்திற்கு எல்லா வேலைகளும் சரியாக நடக்கும். நீண்ட நாள் முடிக்க முடியாமல் வைத்திருந்த வேலைகளை எல்லாம் கூட இந்த நாளில் செய்து மன திருப்தியை அடைவீர்கள். உறவுகள் மத்தியில் நல்ல ஒற்றுமை ஏற்படும். சுப செலவுகள் ஏற்படும். உற்சாகம் நிறைந்த நாள் இன்று.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஆழ்ந்த சிந்தனை இருக்கும். தேவையில்லாத விஷயங்களை யோசித்துக்கொண்டு, தேவையான விஷயங்களை செய்ய மறந்து விடுவீங்க. ஜாக்கிரையாக இருக்க வேண்டும் அன்றாட வேலையில் கவனம் செலுத்த வேண்டும். வேலை வியாபாரத்தில் அலட்சியம் வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் ஜாமீன் நிற்காதீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். புது முடிவு எடுக்கும்போது ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு செயல்பட வேண்டும். ஒரு வேலையை பிறகு செய்து கொள்ளலாம் என்று சோம்பேறித்தனத்தோடு இருக்கக் கூடாது. முக்கியமான வேலைக்கு வெளியே செல்வதாக இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பே வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும். தாமதத்தால் சில பல பிரச்சனைகள் இன்று வர வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். எந்த வேலையை செய்வது எந்த வேலையை செய்யக்கூடாது என்ற தடுமாற்றம் இருக்கும். பேசுவதில் தயக்கம் இருக்கும். தயக்கமான இந்த நாளை கடந்து செல்ல கொஞ்சம் சிரமங்கள் ஏற்படத்தான் செய்யும். கூடுமானவரை வெளியூர் பிரயாணங்களை இன்று தவிர்த்துக் கொள்ளலாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று டென்ஷன் கோபம் தலைவலி எல்லாம் வரும். உங்களை பிரச்சனைக்கு இழுத்து விட நாலு பேர் வேலை செய்வார்கள். இதை எல்லாம் பொறுத்துக் கொள்ள பொறுமை ரொம்ப ரொம்ப தேவை. முன்கோபத்தை குறைத்து பேசுவதை குறைத்து நிதானத்தோடு செயல்பட்டால் நல்லது நடக்கும். யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை புரிந்து கொள்ள இன்று நல்ல அனுபவம் கிடைக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று கழுவிற மீனில் நழுவுற மீனாக செயல்படுவீர்கள். வேலையிடும் வியாபாரத்திலும் நாசுக்காக உங்களுடைய முடிவுகளை வெளிப்படையாக பேசுவீர்கள். எதிரிகளை கையாளும் விதம் திறமையாக இருக்கும் . தந்திரமான வேலைகளை இன்று செய்யப் போகிறீர்கள். பிரச்சனைகள் வந்தாலும் அதிலிருந்து சுலபமாக விடுபடுவீர்கள். இறைவனின் அருள் உங்களுக்கு இருக்கு.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். புது வேலைகளை துவங்கலாம். புதுசாக தொழில் துவங்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்புகளை துவங்கலாம். இந்த நாள் சுபமான நாள். வீட்டில் தடைப்பட்ட சுப காரியங்களும் மீண்டும் நடக்கும். வேலை வியாபாரம் எப்போதும் போல நல்லபடியாக செல்லும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும். தேவையற்ற பகையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. நாலு பேர் மத்தியில் பேசும் போது கவனமாக பேசுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் ரொம்ப ரொம்ப முக்கியம்.
Previous Post Next Post


Put your ad code here