புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார்சைக்கிளில் அதி வேகமாகப் பயணித்த இரண்டு இளைஞர்கள், வேகக் கட்டுப்பாட்டை
இழந்து மின்சாரக்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
நேற்று(2) மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
து.திசாளன் (வயது-19), க.பிரவீன் (வயது- 18) என்ற இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.
விபத்துத் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மோட்டார் சைக்கிளொன்றை நேற்றுமுன்தினம் கொள்வனவு செய்து விட்டு, அதில் நேற்றுப் பயணித்த நிலையிலேயே இந்தக் கோரவிபத்து சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
