இன்றைய ராசிபலன் - 07.07.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாள். எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். எல்லா வேலையிலும் ஒரு ஆதாயத்தை தேடுவீர்கள். லாப நஷ்ட கணக்கு அதிகமாக பார்ப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசி காரர்களுக்கு இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் பிரமோஷன் சம்பந்தப்பட்ட பேச்சுக்களைத் துவங்கலாம். சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. எல்லா விஷயத்திலும் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூடக்கூடிய நாளாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பாராட்டில் மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தில் செலவு செய்யவும் வாய்ப்புகள் உள்ளது. சுப செலவுகள் உண்டு.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு தேவையற்ற பயம் இருக்கும். இதனாலே உங்களுடைய வேலையில் சின்ன சின்ன சிரமங்கள் வரலாம். தேவையற்ற மன பயத்தை அகற்றுங்கள். உங்களுடைய வேலையில் ஆர்வம் காட்டுங்கள். இறைவனின் மீது பாரத்தை போட்டு நாளை துவங்குங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும். நேரத்தை அனாவசியமாக வீணடிக்க வேண்டாம்.

சிம்மம்


சிம்ம ராசி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். பிரிந்த கணவன் மனைவிக்குள் அன்யூனியம் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். பணவரவு சீராக இருக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று வாழ்க்கையின் முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்வீர்கள். உயர்ந்த இடத்திற்கு செல்ல நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொது பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். இறை வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானத்தோடு நடந்து கொள்வீர்கள். முன்கோபத்தை கட்டுப்படுத்தி நிதானத்தை மட்டும் வெளிப்படுத்துவீர்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு உண்டு. அதிர்ஷ்ட காற்று அடிக்க வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். கொஞ்சம் வீண் விரையை செலவுகள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முன்பின் தெரியாத நபரோடு நெருக்கமாக பழக வேண்டாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பகை உண்டாக வாய்ப்புகள் உள்ளது. விரோதத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். யாரிடமும் சண்டை போடாதீர்கள். விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக இருக்க வேண்டும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். அடுத்தவர்களை போல நாமும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வரும். இதனால் சில பல நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுடைய திறமை, உங்களுடைய வாழ்க்கை, கடவுள் உங்களுக்கு கொடுத்ததை மட்டும் அனுபவித்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக பேராசைப்பட வேண்டாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். சிக்கனமாக இருங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் காட்டுங்கள். புது பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டாதீர்கள். இறை வழிபாடு செய்வது மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை இருக்கும். தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். மேலதிகாரிகளோடு வாக்குவாதம் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. சிந்தித்து செயல்படுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. இறைவழிபாடு செய்வது மன குழப்பத்தை சரி செய்யும்.
Previous Post Next Post


Put your ad code here