
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் 120 மாணவிகள் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
நடைபெற்ற கல்வி பொது தராதர சாதரண தர பரீட்சையில் வேம்படி மகளிர் கல்லூரியில் 265 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றி இருந்தனர்.
அவர்களில் 120 மாணவிகள் 9A பெறுபேறுகளையும், 36 மாணவிகள் 8A பெறுபேறுகளையும் 25 மாணவிகள் 7A பெறுபேறுகளையும் பெற்றதுடன், பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவிகளும் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் அறித்துள்ளது.