மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சீராகும். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் கிடைக்கும். உற்சாகத்தோடு வேலை செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளுடைய கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மன நிம்மதியான நாள் இன்று.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் புதுசாக எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. எவரிடத்திலும் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மனக்கவலை இருக்கும். ஏதோ ஒரு சிந்தனை வேலையை செய்ய விடாமல் தடுக்கும். இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் மனதை ஒருநிலைப்படுத்தலாம். வேலையில் கவனம் செலுத்தலாம். இன்றைக்கான வேலையை ஒருபோதும் நாளைக்கு என்று தள்ளி போடாதீங்க.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கை சூழ்நிலை குடும்ப சூழ்நிலை என்னவென்று புரிந்து கொண்டு, வாழ்க்கையை அனுசரித்து செல்வீர்கள். இறைவனின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். நல்லதை நினைவுகள், நல்லதே நடக்கும் எதிர்மறை சிந்தனை வேண்டாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். நீண்ட நாள் சிக்கல்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். சுப காரிய தடைகள் விலகும். சுப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை வியாபாரத்தை பொருத்தவரை எந்த பிரச்சனையாக இருந்தாலும், அதை சுலபமாக எதிர்கொள்வீர்கள். பிரச்சனைகளை சுலபமாக சரி செய்வீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். எந்த ஒரு சலனமும் இல்லாமல், ஒரு குழந்தை போல இந்த நாளை கடந்து செல்வீர்கள். ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்வீர்கள். நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். யாரெல்லாம் நல்லவர்கள், யாரெல்லாம் கெட்டவர்கள் என்பதை அனுபவரீதியாக புரிந்து கொள்வீர்கள். எதிலும் ஆதாயம் தேடுவீர்கள். லாபம் இல்லாமல் எந்த காரியத்திலும் கால் வைக்க மாட்டீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும். வியாபாரத்திலும் வேலையிலும் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நீண்ட தூர பயணங்கள் இனிதே அமையும். வண்டி வாகனம் ஓட்டுபவர்களாக இருந்தால், கொஞ்சம் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும். கையில் இருக்கும் சேமிப்பு கரைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சக ஊழியர்களிடமும் வியாபாரிகளிடமும் கொஞ்சம் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். யாரிடமாவது தேவை இல்லாமல் ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையை பொறுத்தவரை நல்லதே நடக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிரி தொல்லை விலகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று தைரியத்தோடு நடந்து கொள்வீர்கள். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் துணிவோடு எதிர்கொண்டு அதை ஒரு முடிவுக்கு கொண்டு வருவீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற உங்கள் பேச்சு அனைவரையும் உங்கள் பக்கம் ஈர்க்கும். எல்லோரும் உங்களை கண்டு கொஞ்சம் பயப்படவும் செய்வார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் சின்ன சின்ன எதிர்ப்புகள் வரும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும். மனதில் நினைத்ததை பட்டென்று வெளியில் பேச முடியாத சூழ்நிலை உண்டாகும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். வண்டி வாகனங்களை செல்லும் போது கவனமாக இருக்கும்.
Tags:
Rasi Palan