வட்டு. இந்துக் கல்லூரி ஊடகக் கழகத்தின் "நிஜமும் நிழலும்" நூல் வெளியீடு..!!!


வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் “நிஜமும் நிழலும்” இதழ் வெளியீட்டு விழாவும், ஊடகக் கண்காட்சியும் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது,

ஊடகக் கழகத்தின் ஏற்பாட்டில், கல்லூரியின் பதில் அதிபர் வதனி தில்லைச்செல்வன் தலைமையில் , கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் “நிஜமும் நிழலும்” இதழின் முதற் பிரதியை பாடசாலையின் பதில் அதிபர் வெளியிட்டு வைக்க அதனை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம் பெற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து ஊடக கண்காட்சி கூடத்தையும் பிரதம விருந்தினர் நாடா வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், அயற் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.










Previous Post Next Post


Put your ad code here