மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். நல்ல செய்தி உங்கள் செவிகளை வந்து சேரும். நீண்ட நாள் கனவு நினைவாகும். மனதிற்கு பிடித்த வேலைகளை செய்வீர்கள். பிடிக்காத வேலையில் இருந்து வெளியில் வருவதற்கும் இன்று நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பிரிந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். பெருசாக எந்த ஏற்றத்தாழ்வுகளும் இருக்காது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனை நீங்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். தேவையற்ற டென்ஷன் நீங்கும். உற்சாகமாக வேலையை செய்வீர்கள். இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களை பொதுப்பணிகளிலும் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். செய்த தவறுக்கு மனமார மன்னிப்பும் கேட்பீர்கள். எதிரிகள் பிரச்சனை விலகும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கும் நல்ல பாசிட்டிவான ரிசல்ட் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். சென்ற இடமெல்லாம் சீரும் சிறப்புமான மரியாதை கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனை நீங்கும். வருமானம் அதிகரிக்கும். நிதிநிலைமை சீர்படும். கடன் குறையும். இரவு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று நினைத்த காரியங்களை சாதுரியமாக சாதித்துக் கொள்வீர்கள். சுயநலம் அதிகமாக இருக்கும். இதனால் நல்ல நண்பர்கள் நல்ல உறவுகளை இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை, அதிக சுயநலம் கூடாது. இன்று பொது நலத்தோடு சிந்திக்கும் பட்சத்தில் நிறைய நன்மை நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று கவனக்குறைவாக எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். கெட்ட விஷயங்களை மறந்து விடுங்கள். எதிர்மறையாக சிந்திக்க வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க இறை வழிபாடு செய்வது மட்டும் ஒரே வழி.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு தேவையற்ற எதிர்ப்புகள் வரும் நாள். தேவையற்ற பகை உருவாக வாய்ப்புகள் உள்ளது. கவனமாக நடந்து கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளை அனுசரணையோடு நடத்துங்கள். வார்த்தையில் கவனம் தேவை. முன்கோபம் கூடாது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிட மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்ற உங்களுடைய நோக்கம் நிறைவேறும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பாசம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். மறைத்து வைத்திருந்த பாசத்தை இன்று வெளிகாட்டி விடுவீர்கள். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. நிதானமாக சிந்தித்து செயல்படவும். அவசர முடிவு வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கைநிறைய லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். வாங்கிய கடனை திருப்பி அடைக்க நல்ல வழியை கடவுள் காண்பித்துக் கொடுப்பார். மேலும் புதிய கடன் வாங்காமல் பார்த்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். கடமைகளில் இருந்து பின்வாங்க மாட்டீர்கள். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
Tags:
Rasi Palan