யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்
கரவெட்டி வடக்கைச் சேர்ந்தவர்களான சிவதாசன் துசிந்தன் (வயது 22), ஏழுமலை துசாந்தன் (வயது 24) ஆகிய இரு இளைஞர்களுமே உயிரிழந்துள்ளனர்
யாழ்ப்பாணத்தில் இருந்து தமது வீட்டை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள வீதி வளைவொன்றில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேளை , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் இருவருமே சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
விபத்து குறித்து கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலங்களை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் , மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.