வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தன்னம்பிக்கை, மரியாதை, கௌரவம், அரசு வேலை, தந்தை மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றின் காரணியாவார். அதே சமயம் கேது ஒரு நிழல் கிரகமாகும். இந்த கேது ஆன்மீகம், பற்றின்மை, தாந்திரீகம் ஆகியவற்றின் காரணியாவார்.
இவ்விரு கிரகங்களும் ஒன்றிணைந்து பயணிக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமாக தெரியும். தற்போது கேது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் கேது மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.
இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இதன் விளைவாக திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கப்போகிறது. இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் நிகழும் கேது சூரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் கேது சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பொருள் இன்பங்கள் கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். பரம்பரை சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, அந்த சொத்து கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் கேது சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்று பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் கேது சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். சிலர் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
Tags:
Rasi Palan