இன்றைய ராசிபலன் - 23.07.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பத்திற்கு தெளிவு கிடைக்கும் நாள். நீண்ட நாளாக இருக்கும் சந்தேகங்கள் விலகும். மனதிருப்தியோடு உங்களுடைய வேலையையும் வியாபாரத்தையும் செய்ய துவங்குவீர்கள். நிதிநிலைமை சீராகும். இரவு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை சீராகும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். சேமிப்பை உயர்த்துவதற்கு உண்டான முயற்சிகளை நீங்கள் தான் மேற்கொள்ள வேண்டும். வாரா கடன் வசூலாகவும் வாய்ப்புகள் இருக்கிறது. யாராவது உங்களுக்கு பணம் தரணும்னா உங்களுக்கு ஒரு போன் பண்ணி கேளுங்க. சொத்து சுகம் சேரும். வேலை வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிவாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். நினைத்த காரியத்தை சாதித்து காட்டுவீர்கள். குறிப்பாக இளைஞர்களுக்கு இன்று உத்வேகம் அதிகமாக இருக்கும். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கவனம் தேவை.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று மன சாந்தி இருக்கும். எதிலும் நிதானத்தோடு செயல்படுவீர்கள். தேவையற்ற சிந்தனைகள் மனதில் இருந்து நீங்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தோடு செயல்படுவீர்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் தலைவலியான நாளாக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. தேவையற்ற பிரச்சனைகளை உங்களைத் தேடி வரும். நீங்கள் அமைதியாக இருந்தால் கூட வம்பு வழக்குகள் உங்களை விடாது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். பிரச்சனை என்று தெரிந்தால் அந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு நடந்து கொள்வீர்கள். எடுத்த முடிவில் நிலையாக நிற்பீர்கள். மேலதிகாரிகளோடு வாக்குவாதம் வரும். இருந்தாலும் உங்களுடைய கை உயர்ந்து நிற்கும். உங்கள் பக்கம் நியாயம் இருக்கும். நியாயத்திற்காக போராடுவீர்கள். நேர்வழியில் செல்வீர்கள். இந்த நாளில் புதிய அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையை நல்ல பாதைக்கு அழைத்துச் செல்லும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அமைதியான நாள். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இருக்காது. வேலை வியாபாரம் எல்லாம் அந்தந்த நேரத்தில் சரியாக நடந்து முடியும். கணக்கு வழக்குகளில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வாடிக்கையாளரோடு நல்லுறவு ஏற்படும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று போட்டி பொறாமைகளோடு போராட வேண்டி இருக்கும். சின்ன சின்ன எதிரி தொல்லை இருக்கும். வேலையில் கொஞ்சம் அலைச்சல் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. மேல் அதிகாரிகளை அனுசரித்து நடத்த வேண்டும். வாக்குவாதம் வேண்டாம். முன் கோபம் வேண்டாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும். தேவையற்ற அலைச்சல்கள் இருந்தால் உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்திலும் வேலையிலும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். டென்ஷன் கொடுக்கும் எந்த வேலையையும் இன்று கையில் எடுக்காதீங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று புது முயற்சிகள் வேண்டாம். ஒரு வேலையை திரும்ப திரும்ப செய்ய வேண்டிய வாய்ப்புகள் வரலாம். சுபகாரிய வேலைகளில் தடைகள் வரலாம். எந்த நல்ல காரியமாக இருந்தாலும், நாளை தள்ளி போடுங்கள். உங்களுடைய அன்றாட வேலையில் மட்டும் இன்று கவனம் செலுத்தினால் போதும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று முன்னேற்றத்தோடு உங்கள் நாள் நகர்ந்து செல்ல போகிறது. எதிர்பாராத பாராட்டுகளும் பதவிகளும் தானாக உங்களைத் தேடி வரும். இருந்தாலும் தன்னடக்கத்திலிருந்து நீங்கள் கொஞ்சம் கூட தடுமாற மாட்டீர்கள். மனதில் சந்தோஷத்திற்கு நிறைவான இடத்தை கொடுக்கப் போகும் நாள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு உங்களுடைய பணத்தட்டுப்பாட்டை குறைக்கும். நிதிநிலைமை ஏற்படும். மன நிம்மதி கிடைக்கும். பிள்ளைகளுடைய தேவைகளை பூர்த்தி செய்து, மனமகிழ்ச்சி அடைவீர்கள். வேலையில் மட்டும் கொஞ்சம் அலைச்சல் வரலாம். கவலைப்படாதீங்க, உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற நல்ல பெயர் கிடைக்கும்.
Previous Post Next Post


Put your ad code here